29 நாடுகளுக்கு பரவிய..புதிய லாம்ப்டா உருமாறிய கொரோனா..இனி வேக்சின் வேலை செய்யுமா.. WHO கூறுவது என்ன - ஆசிரியர் மலர்

Latest

19/06/2021

29 நாடுகளுக்கு பரவிய..புதிய லாம்ப்டா உருமாறிய கொரோனா..இனி வேக்சின் வேலை செய்யுமா.. WHO கூறுவது என்ன


டெல்லி: பெரு நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு லாம்ப்டா என பெயரிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, அது கவனிக்கப்பட வேண்டிய உருமாறிய கொரோனா என்றும் அது 29 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல நாடுகளிலும் கொரோனா குறைவது போலத் தோன்றினாலும், கொஞ்ச கால இடைவெளியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது...! உருமாறிய கொரோனா வகைகளே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்படும் உருமாறிய கொரோனா வகைகள், வைரஸ் பரவலையும் பாதிப்பையும் தீவிரப்படுத்துகின்றன.புதிய உருமாறிய கொரோனாஇந்த நிலையில் தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட குறைந்தபட்சம் 29 நாடுகளுக்குப் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இந்த உருமாறிய கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு கவனிக்கப்பட வேண்டிய கொரோனா வகை என்றும் பட்டியலிட்டுள்ளது.லாம்ப்டா வகை கொரோனாஉருமாறிய கொரோனா வைரசஸ்களுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை வழங்கி வரும் நிலையில், பெரு நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வைரசுக்கு லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. லாம்ப்டா வகை கொரோனா முதலில் ஆகஸ்ட் 2020இல் கண்டறியப்பட்டதாகவும், தற்போது பெரு நாட்டில் உறுதி செய்யப்படும் வழக்குகளில் 81% லாம்ப்டா கொரோனா வகைகளாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 60 நாட்களில் சிலி நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 32% லாம்ப்டா வகையாகவே இருந்துள்ளது.தென் அமெரிக்க நாடுகள்லாம்ப்டா உருமாறிய கொரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த லாம்ப்டா கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் தற்போது இந்த உருமாறிய கொரோனா வேகமாகப் பரவி வருவதாகவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.தடுப்பூசிகளிலிருந்து தப்புமாகொரோனா பாதிப்பை அதிகரிக்கத் தேவையான மரபணு மாற்றத்தை லாம்படா வகை கொரோனா கொண்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது கொரோனா தடுப்பூசிகளிடம் இருந்து தப்புமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லாம்படா வகை எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமா, இதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துக் கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..'

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459