சென்னை முதல் நாகை வரை.. 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..எந்த மாவட்டத்தில் யாருக்கு பணி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்னை முதல் நாகை வரை.. 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..எந்த மாவட்டத்தில் யாருக்கு பணி

 


சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 24 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.24 மாவட்ட ஆட்சியர்கள்இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை - ஜெயரானி &; திருவள்ளூர் - ஆல்பி ஜான் வர்கீஸ் விழுப்புரம் - மோகன் &; புதுக்கோட்டை - கவிதா ராமு தஞ்சை - தினேஷ் பொன்ராஜ் &; தென்காசி - சந்திரலேகா ஆகியோர் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இடமாற்றம்அதேபோல. கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர் &; விருதுநகர் - மேகநாத் ரெட்டி தேனி - முரளிதரன் &; செங்கல்பட்டு - ராகுல் நாத் காஞ்சிபுரம் - ஆர்த்தி &; வேலூர் - குமரவேல் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பணியிடமாற்றம்மேலும், திருவண்ணாமலை - முருகேஷ் &; திருப்பத்தூர் - அமர் குஷவா நாமக்கல் - ஷ்ரேயா சிங் &; திண்டுக்கல் - விசாகன், கோவை - சமீரான் &; திருப்பூர் வினீத், ஆகியோர் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு அரசு உத்தரவுஅரியலூர் - ரமண சரஸ்வதி &; கரூர் - பிரபு சங்கர், ராமநாதபுரம் - கோபால சுந்தரா &; ஈரோடு - கிருஷ்ன உன்னி நாகை - அருண் தம்புராஜ் &; திருவாரூர் - காயத்ரி கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியராக நியமம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment