zinc நம்மை காக்குமா? வெற்றிலைக்கும் துத்தநாகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ஜிங்க் பற்றிய முழுமையான தகவல்..! - ஆசிரியர் மலர்

Latest

14/05/2021

zinc நம்மை காக்குமா? வெற்றிலைக்கும் துத்தநாகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? ஜிங்க் பற்றிய முழுமையான தகவல்..!

 


எல்லா தானியங்களிலும் கொட்டை பருப்பு வகைகளிலும் இந்த துத்தநாகம் என்ற தங்கச்சத்து உள்ளது. எல்லா பழங்கள் காய்கறிகளிலும் இந்த ஜிங்க் சத்தானது காணப்படுகிறது. 

 

கொரோனா காலத்தில் நம்முடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. கொரோனா நம்மை விடாமல் துரத்துகிறது. ஓடிக்கொண்டே இருக்கிறோம் ஏதாவது ஒரு தீர்வு கிடைக்குமா!!! என்று தேடிக்கொண்டே கொண்டிருக்கிறோம் அந்த வழியில் \"இந்த ஜிங்க் சத்தை எடுத்துக் கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், கொரோனாவில் இருந்து நம்மை காக்கும்\", என்று நம்பி பலரும் இந்த சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அரசும் அறிவுறுத்துகிறது . இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் நமக்கு கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா? இது நம்மை காக்குமா? 

 

 

ஜிங்க் எப்படி வேலை செய்கிறது? 

 

நொதிகளுக்கு உப நொதியாக( co enzyme) 

நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றங்கள் குறிப்பாக தோல் தலைமுடி இனப்பெருக்க உறுப்புகள் ஜீரண மண்டலம் சுவாச மண்டலம் ஆகியவற்றில் நடைபெறும் பல்வேறு செல் செயல்பாடுகளில் முக்கியமான ஒரு நொதியாக( என்சைம்) செயல்படுகிறது. 

 

 

ஏன் இப்பொழுது ஜிங்க் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது? 

 

எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு இந்த சிங்க் கொடுத்து சோதனை செய்ததில் அவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டுவதும் குறைவானது. வயிற்றாலை நோய் வருவதும் குறைந்தது. நோயினுடைய தீவிரம் மட்டுப்பட்டது. இறப்பும் குறைந்தது. அதனால் உடம்பில் ஜிங்க், எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் பலன் கிடைக்கிறது என்பது தெரிந்தது. 

 

ஜிங்க் சத்து எதிர்ப்பு அணுக்களை அதிகரிப்பதும்(B cell immunity), ஞாபக சக்தி( T cell immunity) எதிர்ப்பு செல்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

 

குறைவான எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு கொரோனா ஒரு தீவிரமான நோயாக தாக்குவதால் சிங்க் சத்து அவர்களுக்கு உதவக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜிங்க் வைட்டமின் சி போன்றவை தரப்படுகின்றன. 

 

 

 

சிங்க் குறைவால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? 

 

குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு, வயிற்றில் செரிமானக்குறைவு, வயிற்றுப்போக்கு மற்றும் 

பெரியவர்களுக்கு முடி உதிர்தல் தோலில் மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். எதிர்ப்பு சக்தி குறைவால் நோய் தொற்றுக்கு உள்ளாகலாம். 

 

உணவில் சிங்க் எந்தெந்த பொருட்களில் உள்ளது? 

 

நம் வீடுகளில் வெற்றிலையை ஒரு மங்களச் சின்னமாக கருதுகிறோம். திருமண வீடுகளில் தாம்பூலம் தரிப்பது என்பது முக்கியமான ஒரு சடங்கு ஆகவும் இருக்கிறது. 

 

சளிக்காக நாம் தயாரிக்கும் கஷாயத்தில் வெற்றிலை கட்டாயம் இடம் பெறுகிறது. உணவுக்கு பிறகு தரிக்கும் தாம்பூலம் நம் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர் நம்முன்னோர். இதற்கெல்லாம் காரணமான வெற்றிலை, அது வெற்று இலை அல்ல. சிங்க் இலை என்று கூறுமளவுக்கு அதிக அளவிலான ஜிங்க் சத்தை கொண்டுள்ளது. 

 

எல்லா தானியங்களிலும் கொட்டை பருப்பு வகைகளிலும் இந்த துத்தநாகம் என்ற தங்கச்சத்து உள்ளது. எல்லா பழங்கள் காய்கறிகளிலும் இந்த ஜிங்க் சத்தானது காணப்படுகிறது. 

கொண்டைக்கடலை மற்றும் தர்பூசணி விதைகளும் சிங்க் சத்தை அதிகளவு கொண்டுள்ளன. சட்னி கடலை என்று கூறப்படும் பொட்டுக்கடலையை தினமும் சேர்த்துக் கொண்டாலே தேவையான அளவு சிங்க் கிடைக்கும். எள், ஓட்ஸ், பாதாம், பிஸ்தா, ஆளி விதை போன்றவற்றிலும் ஜிங்க் சத்து அதிக அளவு உள்ளது. 

 

 

 

காய்களில், ப்ரோக்கலி , பசலைக் கீரை, பூண்டு, காளான் அதிகளவு துத்தநாகச் சத்தை கொண்டுள்ளது. தயிர் ஜிங்க் சத்து கொண்ட உணவாகும். கடல் உணவுகளான மீன் மற்றும் சிப்பி உணவுகள் அதிக அளவு கொண்டுள்ளன. 

 

மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது என்ன கவனிக்க வேண்டும்? 

 

மாத்திரையாக தரும் போது, இந்த சத்துக்களை நம்முடைய உடலுக்கு கிடைப்பதை, குடல் உறிஞ்சுவதை அதிகரிக்க முடியும் என்பதால் தருகிறோம். ஒரு நாளைக்குத் தேவையான அளவு 10 மில்லி கிராம் மட்டுமே. 

 

Black Fungus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆபத்து..! கருப்பு பூஞ்சைகளின் அபாயம்... எவ்வாறு , யாரையெல்லாம் தாக்கும்? அறிகுறிகள் என்ன? 

 

அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது என்ன நடக்கலாம்? 

 

பல்வேறு வைட்டமின் மாத்திரைகளில் ஜிங்க் இருக்கும். அதனால் நாமாக கடைகளில் சென்று மாத்திரைகளை வாங்கி எடுக்கும்பொழுது தேவையில்லாமல் அதிகமான அளவு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்தும் இருக்கிறது. மாத்திரையாக தயாரிப்பதற்காக ஒரு சில வேதிப் பொருட்கள், நிறமிகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அதனால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியலாம். அதிக அளவு ஜிங்க் எடுக்கும் பொழுது தாமிரம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் உறிஞ்சப்படாமல் போவதற்கும் அவை ரத்தத்தில் குறைவதற்கும் காரணமாகலாம். 

 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஜிங்க் சத்து அதிகம் உள்ள பொருட்களை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் ,ஒரே ஒரு விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக் கொள்வதும் போதுமானதாக இருக்கும்.-News18

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459