கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள்.. பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்..! - ஆசிரியர் மலர்

Latest

14/05/2021

கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள்.. பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்..!

 

corona-goa-jpg

கொரோனா சிகிச்சை அளிக்க அரசு பள்ளிகளை தயாராக வைத்திருங்கள் என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் 7000க்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சியும் தீவிரமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கக்கூடிய அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் இந்த அனைத்து பள்ளிகளும் தயாராக வைத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பிலும், அதேபோன்று மாநகராட்சி துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனென்றால் தற்போது உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிகமான வகுப்பறைகள் இருக்கின்றன. பெரிய இடவசதி கொண்டவையாக இருப்பதால் அந்த பள்ளிகளை முழுமையான பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. 


கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகள் மட்டும் 60 பள்ளிகளில் படுக்கை வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டன. தற்போது அந்த படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அந்த பள்ளியிலேயே பூட்டி வைக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது அந்த பள்ளிகளை திறந்து மீண்டும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்துவதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459