ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி - Dir Proceeding - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி - Dir Proceeding

 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் சார்ந்து விழிப்புணர்வு பயிற்சி (இணையதளம் வாயிலாக )

IMG_20210510_110753

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , 32 மாவட்டங்களில் இயங்கி வரும் பெண்கள் பயிலும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவியர்கள் உடல் நலம் , மன நலம் , பழகும் தன்மை , தன் சுத்தம் , சுற்றுப்புற சுத்தம் , ஆசிரியர் - மாணவிகள் இடையே உறவு மாணவியர்களின் ஊட்டச் சத்து , மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் தீர்வுகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது “ வளரிளம் பருவ பெண்களுக்கான மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை திட்டம் ” ஆகும். திட்டத்தின் நோக்கம் வளரிளம் பருவ பெண்களிடையே , தற்கால ஊட்டச் சத்துமுறை , சுகாதாரமற்ற சூழ்நிலை மற்றும் உடல்நிலை மாணவிகளின் கற்றல் திறனை பாதிக்கும் நிலை அதிகரித்துள்ளது. 


உடல் நலம் மற்றும் ஊட்டச் சத்து பிரச்னைகள் மாணவிகளின் பள்ளி வருகை மற்றும் கற்றல் அடைவுடன் தொடர்புடையவை. கிராமப் புறங்களில் ஊட்டச் சத்து தொடர்பான பிரச்னைகள் பெருகி வருகின்றன . ஊட்டச் சத்து , அயோடின் மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக நோய் தொற்று , இரத்த சோகை , டிராக்கோமா , தோல்நோய் குறைபாடுகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் உருவாகின்றன.


Dir Proceedings - Full details Download here..

No comments:

Post a Comment