தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு CPS ஒழிப்பு இயக்கம் வாழ்த்து. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு CPS ஒழிப்பு இயக்கம் வாழ்த்து.

 

IMG_20210505_155352


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மகத்தான வெற்றி மகுடம் சூடி , தமிழக முதல்வராக அரியணை ஏறும் தங்களுக்கு தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழகத்தில் பணியாற்றும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் இவ்வெற்றியினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம் . இவ்வேளையில் 12 இலட்சம் அரசு ஊழியர் , ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட விரைந்து அரசாணை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்றும் தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

No comments:

Post a Comment