நாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

17/05/2021

நாக்கில் ஏற்படும் திடீர் வறட்சி.. புதிய கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.. மருத்துவர்கள் வார்னிங்

பெங்களூரு: நாக்கில் ஏற்படும் கடும் வறட்சி மற்றும் எரிச்சல் கொரோனா பாதிப்பிற்கு புதிய அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் அலையில் அறிகுறிகள் முற்றிலுமாக வேறு மாதிரியாக உள்ளது.


முதல் அலையில் காய்ச்சலே பெரும்பாலும் அறிகுறியாக இருந்த நிலையில், இரண்டாம் அலையில் உடல் சோர்வு, வாசனை இழப்பு உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா நோயாளிகள் சிலருக்கு நாக்கில் கடும் வறட்சி ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.நாக்கு வறட்சிஇவர்களுக்கு நாக்கில் வறட்சியும் நமைச்சலான உணர்வும் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எவ்விதமான கொரோனா அறிகுறிகளும் இவர்களுக்கு இல்லை. இது குறித்து கொரானா டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் டாக்டர் ஜிபி சத்தூர் கூறுகையில், "55 வயது மதிக்க ஒருவர் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் நாக்கில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். அவருக்குக் காய்ச்சல் உள்ளிட்ட வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்" என்றார்.காரணம் என்னஇந்த புதிய கொரோனா அறிகுறி குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இங்கிலாந்து, பிரேசில் கொரோனா வகை, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட இரட்டை மரபணு மாறிய கொரோனா வகை காரணமாக இந்த புதிய அறிகுறி ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது வரை இது குறித்து உறுதியான தகவல் இல்லை.புதிய கொரோனா அறிகுறிகள்கோவிட் நாக்கு என்று அழைக்கப்படும் இந்த அறிகுறி நாக்கில் எரிச்சல், அரிப்பு, தெளிவற்ற உணர்வு, வாய் புண் மற்றும் தீவிர வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. கொரோனா நோயாளிகளுக்குக் காய்ச்சல் இல்லை என்றாலும் கடும் சோர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, நோயாளிகள் தங்கள் நாக்கில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தால் மருத்துவர்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் டாக்டர் ஜிபி சத்தூர் தெரிவித்தார்.உருமாறிய கொரோனாஇந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட1.617.2 கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகை என பட்டியலிட்டுள்ளது. இந்த வகை கொரோனா தான் இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இருப்பினும், இது தீவிர பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதற்கோ தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படாது என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை.

No comments:

Post a Comment