வாழ்நாள் முழுவதும் தடுப்பாற்றல்.. உருமாறிய கொரோனாவையும் அழிக்கும்.. எப்படி? முக்கிய ஆய்வு முடிவுகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

31/05/2021

வாழ்நாள் முழுவதும் தடுப்பாற்றல்.. உருமாறிய கொரோனாவையும் அழிக்கும்.. எப்படி? முக்கிய ஆய்வு முடிவுகள்


டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்களின் உடல்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக 2 ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் இன்னும் முடியவில்லை. உலகின் பல முன்னணி நாடுகளும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை ஒழிக்கத் தடுப்பூசி மட்டுமே ஒரே முடிவாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அனைத்து நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.கொரோனா தடுப்பூசிஅதேநேரம் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் உடல்களில் எத்தனை காலம் தடுப்பாற்றால் இருக்கும் என்பது குறித்து தெளிவான முடிவுகள் இல்லை. ஒரு சில ஆய்வு முடிவுகளில் தடுப்பாற்றல் 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை மட்டும் இருக்கும் என்றும் இதனால் ஒவ்வொரு ஆண்டு பொதுமக்கள் தடுப்பூசிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் என்றும் சில ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சற்றே அச்சத்தைக் கிளப்பியிருந்தது.10 ஆண்டுகள் வரை இருக்கும்இந்நிலையில், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உடல்களில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தடுப்பாற்றல் இருக்கும் என புதிய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலரது உடல்களில் 10 ஆண்டுகள் வரைகூட தடுப்பாற்றல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது கொரோனா வைரசை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை எலும்பு மஜ்ஜை தொடர்ந்து உற்பத்தி செய்யும் என்பதே இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளதுஉடலில் ஆன்டிபாடிகள்கொரோனாவில் இருந்து குணமடைந்து சில மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகள் ரத்தத்தில் குறையத் தொடங்குவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதாவது 11 மாதங்களுக்கு பிறகு கொரோனா ஆன்டிபாடிகளை உடலில் குறைவதை அவர்கள் கண்டறிந்தனர். அதேநேரம், எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்கள் தேவையான நேரத்தில் ஆன்டிபாடிகளை உருவாக்குவது தெரிய வந்தது.எலும்பு மஜ்ஜைஅதாவது ஓர் ஆண்டிற்குப் பிறகு எப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, அதற்குத் தேவையான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் திறன், எலும்பு மஜ்ஜையில் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது. குறிப்பாக, இவை உருமாறிய கொரோனா வகைகளுக்கு ஏற்ப தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க வல்லது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிகச் சிறந்த தடுப்பாற்றல்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் அதிக எதிர்ப்புச் சக்தி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், அதன் பிறகு தடுப்பூசி எடுத்துக் கொண்டால், உருவாகும் தடுப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 2ஆம் பூஸ்டர் டோஸ்கூட தேவைப்படாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.:

No comments:

Post a Comment