கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

19/05/2021

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

 


 

கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அழைப்பதால், தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்பும் எடுத்துகொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.
 


தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரசு வெறுமனே ஊரடங்குகளை மட்டும் அறிவிக்காமல், இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசு சார்பில் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது.
​கோவிட் தடுப்பூசி

இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட பிறகு சில பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், சரியான உணவு பழக்க வழக்கம் மற்றும் முறையான ஓய்வின் மூலம் இந்த பிரச்சினையில் இருந்து நாம் மீண்டு வர முடியும். இதற்கு சுகாதாரத்துறை கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

சரியான உணவுகளை உட்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஐந்து உணவுகளைப் பற்றி நிபுணர்கள் நமக்கு கூறுகின்றனர்.

​மஞ்சள்


மஞ்சளில் உள்ள மஞ்சள் நிற நிறமி நமது ஆரோக்கியதிற்கு மிகவும் அவசியமாகும். நமது உடலில் தீங்கு ஏற்படும் நிலைகளை நிர்வகிக்க இது பயன்படுகிறது. மூளையில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்க மஞ்சள் நமக்கு உதவுகிறது. எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்பு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த மஞ்சளை பல்வேறு உணவு வகைகளுடன் சேர்த்து நீங்கள் உண்ண முடியும். நீங்கள் சமைக்கும் காய்கறிகளிலும் மற்றும் பாலுடன் கலந்தும் இந்த மஞ்சளை பயன்படுத்தலாம்.

​பூண்டு


பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குடலில் உள்ள சில நுண்ணிய உயிரினங்களுக்கு உணவளிக்க இது பயன்படுகிறது. பூண்டில் நிறைந்துள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நுண்ணிய உயிரினங்களுக்கு உணவாக அமைகின்றன.

​இஞ்சி

இஞ்சி ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். உயர் ரத்த அழுத்தம், கரோனரி நோய் மற்றும் நுரையீரல் தொற்று போன்ற நோய்களை கட்டுப்படுத்த இஞ்சி நமக்கு உதவுகிறது. மேலும் இஞ்சி மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

​பச்சை காய்கறிகள்


நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் நிச்சயம் பச்சைக்காய்கறிகள் இடம்பெறுகின்றன. பச்சைக் காய்கறிகளில் ஊட்டச் சத்துக்கள், தாதுக்கள் மற்றும் பினோலிக் கலவைகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இதில் கால்சியம் மற்றும் தாதுக்களும் அதிக அளவில் உள்ளன. கீரை, ப்ராக்கோலி போன்ற காய்கறிகளை எரிச்சலை நிர்வகிக்க பயன்படுத்தலாம். எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்பும் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் பச்சை காய்கறிகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.

​பிரஷ்ஷான பழங்கள்


பிரஷ்ஷான பழங்களில் ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் தாவர செயற்கை சேர்மங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

​ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் பைட்டோ பிளவனாய்டுகள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரோடோனின் அளவை விரிவாக்க உதவுகிறது.

​சூப்


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதற்கு தேவையான உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம். நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காய்கறி சூப் அல்லது கோழி குழம்பு சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

​டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் உங்கள் மனநிலையை மேம்படுத்தி, ஆற்றலை வழங்க உதவுகிறது. டார்க் சாக்லேட் எடுத்துக்கொள்வதன் மூலம் கரோனரி நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க முடியும். தடுப்பூசி போடுவதற்கு பின் உட்கொள்ள வேண்டிய முக்கிய உணவாக டார்க் சாக்லேட் உள்ளது.

​வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்


வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் நீரிழிவு மற்றும் நரம்பியல் போன்ற நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நிறைவுறாக் கொழுப்பு, புரதம் மற்றும் உமிழும் குறிபான்களை குறைக்க உதவுகிறது.

​ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டு, இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. ப்ரோக்கோலி கொரோனா நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரோக்கோலியை சமைத்து அல்லது வேகவைத்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

​தவிர்க்க வேண்டியவை


தடுப்பூசி போடுவதற்கு முன்பும் பின்பும் தடுக்க வேண்டிய விஷயங்கள் என சில உள்ளன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்.

புகைப்பிடித்தல்

வெறும் வயிற்றில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்

மது உட்கொள்ளுதல்

காஃபினேட் பானங்கள்

No comments:

Post a Comment