நாளை முதல்.. தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட லாக்டவுன்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விபரம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

14/05/2021

நாளை முதல்.. தமிழகத்தில் கடுமையாக்கப்பட்ட லாக்டவுன்.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விபரம்

  

கட்டுப்பாடுகள்தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள்அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரைமட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.போன்ற மின் வணிக நிறுவனங்கள் (-) மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. , பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment