விண்ணப்பித்து விட்டீர்களா ..தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/05/2021

விண்ணப்பித்து விட்டீர்களா ..தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.


தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.072/21

மொத்த காலியிடங்கள்: 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineer (Civil) – 16
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
 
பணி: Hindi Translator – 01
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Jr. Accounts Officer – 05
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவமர்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 
சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.35,400 – 1,12,400

பணி: Upper Division Clerk – 12
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Stenographer Grade – II – 05
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.25,500 – 81,100

பணி: Lower Division Clerk – 23
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் (சுருக்கெழுத்து, தட்டச்சு) அடிப்பைடயில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.840 கட்டணமாக செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி: 25.06.2021
 

No comments:

Post a Comment