அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

13/05/2021

அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

 


law

அரசு ஊழியர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா நிவாரணம் முதல் தவணையாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்க, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது; 2.07 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4,153 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.மத்திய - மாநில அரசு ஊழியர்கள், அரிசிக்கான ரேஷன் அட்டை வைத்துஉள்ளனர்.


ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வந்து விடுகிறது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், சாப்பாட்டுக்காக போராடுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் முயற்சியாக, முதல்வரின் இந்த அறிவிப்பை எதிர்க்கவில்லை. அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொடுப்பதற்கு, இது உகந்த நேரம் இல்லை.பயனாளிகள் பலரும் சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்கள் பணத்துக்கு கஷ்டப்படவில்லை.


தற்போது, மருத்துவ உட்கட்டமைப்புக்காக, கணிசமான நிதி தேவைப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அதிகரிப்பது; கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது தான் தற்போது முக்கியம். அவசர நிலையை எதிர்கொள்ள, நாம் தயாராக இருக்க வேண்டும்.எனவே அரசு ஊழியர்கள், பொதுத் துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்க தடை விதிக்க வேண்டும்.


ஊரடங்கால் வருமானம் இழந்தவர்களுக்கு in மட்டும், நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மனு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459