மே 24 முதல் முழு ஊரடங்கு.. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி.. இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும் - ஆசிரியர் மலர்

Latest

22/05/2021

மே 24 முதல் முழு ஊரடங்கு.. வெளியூர் செல்பவர்கள் நலன் கருதி.. இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும்


சென்னை: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், வெளியூர் செல்பவர்களின் நலன் கருதி இன்றும் நாளையும் மட்டும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், வெளியூர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்திருந்தாலும், வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.தமிழகத்தில் ஊரடங்குநேற்று மட்டும் தமிழ்நாட்டில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 467 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். சென்னையில் தற்போது வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருந்தாலும், கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தலைநகர் தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.தளர்வுகளற்ற முழு ஊரடங்குஇந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 24ஆம் தேதி முதல் ஒரு வாரம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காய்கறி, மளிகைக் கடைகள் இயங்கவும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பேருந்துகள்தமிழகத்தில் தற்போது பேருந்து சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், வெளியூர் செல்பவர்களின் நலன் கருதி இன்றும் நாளையும் மட்டும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், வெளியூர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மின்னணு சேவை நிறுவனங்கள்மேலும், மின்னணு சேவை நிறுவனங்கள் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.போன்ற நிறுவனங்களில் உணவு விநியோகம் செய்யவும் மேற்கண்ட நேரங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459