ஸ்வயம் இணையதளத்தில் 123 புதிய படிப்புகள்: பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

31/05/2021

ஸ்வயம் இணையதளத்தில் 123 புதிய படிப்புகள்: பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகம்

 

676826

கரோனா தொற்று பரவல் அதிகமானதால் உயர்கல்வி பயிலும்மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள்  கற்பிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மத்திய கல்விஅமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஸ்வயம் இணையதளம், இணையவழி கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

இந்நிலையில், பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்காக 123 படிப்புகளை ஸ்வயம் இணையதளத்தில் யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு 83 படிப்புகளும், முதுநிலை மாணவர்களுக்கு 40 படிப்புகளும் அடங்கும். இந்த 123 படிப்புகளும் வரும் ஜூலை- அக்டோபர் மாதத்துக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பான விவரங்களை https://www.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த படிப்புகளைப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பயிலும் மாணவர்களும், தொழிற் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும் இணையவழியில் படிக்கலாம். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஸ்வயம்தளத்தில் உள்ள படிப்புகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரியும் விதமாக தங்களின் வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment