அறிகுறிகள் இருந்தும்.. சோதனையில் கொரோனா இல்லை என்று வருகிறதா? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அறிகுறிகள் இருந்தும்.. சோதனையில் கொரோனா இல்லை என்று வருகிறதா? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்


டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அறிகுறிகள் இருந்தும்கூட சிலருக்கும் பரிசோதனைகளில் கொரோனா இல்லை என முடிவு கிடைக்கிறது.இந்தியாவில் இப்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா அறிகுறிகள் இருக்கும் சிலருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்றே முடிவுகள் வருவதாகக் கூறப்படுகிறது. அம்மாடியோவ்.. ஒரு கொரோனா நோயாளி.. இத்தனை பேருக்கு நோயை பரப்புகிறாராம்.. சமூக இடைவெளி முக்கியம்!என்றால் என்னமருத்துவ வல்லுநர்கள் இதைஎன்று அழைக்கிறார்கள். அதாவது. ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும், அவருக்குப் பரிசோதனைகளில் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தால், அதன் பெயர் தான்ஆகும். இதேபோல கொரோனாவால் பாதிக்கப்படாத ஒருவருக்கு பாசிடிவ் என முடிவு வந்தால் அதுஎன்று அழைக்கப்படும். சராசரியாக ஐந்தில் ஒரு கொரோனா நோயாளிக்கு இதுபோன்ற தவறான முடிவுகள் வருவதாகக் கூறப்படுகிறது.30% தவறான முடிவுஇப்படி முடிவுகள் வர பல காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக கொரோனா பாதிப்பைக் கண்டறிய பல்வேறு வழிகள் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவற்றில் ஆர்டி பிசிஆர் சோதனைகளிலேயே முடிவுகள் துல்லியமாகக் கிடைப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிலும்கூட சுமார் 30% பேருக்கு இதுபோல தவறான முடிவுகள் வர வாய்ப்புள்ளதாக நேத்தெல்த் தலைவருமான டாக்டர் ஹர்ஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.காரணம் என்னஇதற்கு முக்கிய காரணம் உருமாறிய கொரோனாகளில் சில வகைகள் இந்த ஆர்டி பிசிஆர் சோதனைகளில் சிக்குவதில்லை. முக்கியமாகப் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வகை இதில் தப்ப அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர் ஹர்ஷ் மகாஜன் கூறினார். ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சோதனை முடிவுகளில் நெகடிவ் என்ற முடிவுகள் வரும், மேலும், அதிகளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், சில முறை மனித தவறுகளால் இப்படி முடிவுகள் வர வாய்ப்புள்ளது.என்ன செய்ய வேண்டும்ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும் முடிவுகள் நெகடிவ் என்று வந்தால், முதலில் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிமீட்டரின் உதவியுடன் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். ஆக்சிஜன் அளவு ஒருவருக்கு 94க்கு கீழ் குறைந்தால் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட்டாக வேண்டும். இந்த ஆக்சிமீட்டர் அருகிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.அடுத்த கட்ட நடவடிக்கை2 அல்லது 3 நாட்களில் மீண்டும் ஆர்டி பிசிஆர் சோதனை செய்ய வேண்டும். அதில் மீண்டும் கொரோனா நெகடிவ் என்று வந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் சிடி ஸ்கேனை மேற்கொள்ள வேண்டும். சிடி ஸ்கேனில் ஒருவரது நுரையீரல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். அதேபோல ரத்தப் பரிசோதனைகள் மூலமும் ஒருவருக்கு கொரோனா உள்ளதா என்பதைக் ஓரளவு கண்டறிய முடியும்.'!

No comments:

Post a Comment