கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது : தமிழக அரசு உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது : தமிழக அரசு உத்தரவு


சென்னை: 
கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இணையக்குநர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:  கரோனா காலத்தில் கல்லூரி வகுப்புகளை இணையவழியாக  வீட்டிலிருந்தவாறு மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சில கல்லூரிகளில் இணையவழியாக வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களை கல்லூரிக்கு கண்டிப்பாக வருகைபுரிய தெரிவிப்பதாகவும், என்ஏஏசி சாந்த பணிகள் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆசிரயர்களை கட்டாயம் கல்லூரிக்கு வருகை புரிய நிர்பந்திப்பதாகவும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

எனவே, கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் கல்லூரி ஆசிரியர்களை எக்காரணத்தைக் கொண்டும் கல்லூரிக்கு நேரில் வருகைப்புரிய நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

மேலும் கல்லூரி வகுப்புகளை இணையவழியாக  வீட்டிலிருந்தவாறு மட்டுமே ஆசிரியர்கள் நடத்தப்பட வேண்டும். அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை வழுவாது கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a comment