தலைமுடி நன்கு வளர சித்தர்கள் கூறிய மருத்துவம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தலைமுடி நன்கு வளர சித்தர்கள் கூறிய மருத்துவம்

 


முடி வளர சித்தர்கள் கூறிய மருத்துவம் :-

 

அகத்தியர் பாடல் :-"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".

                                                        
                                                            
                                                                                        - அகத்தியர் குணபாடம்


விளக்கம் :-

 கையாந்தகரை என்றால் கரிசலாங்கண்ணி ....
கரிசாலங்கண்ணி சாறு நான்கு பலம் எடுத்துக் கொள்ள வேண்டும்...


குன்றிமணிப்பருப்பு இரண்டு பலம் எடுத்துக் கொள்ள வேண்டும்....

எள் எண்ணெய் ஓரு பலம் எடுத்துக் கொள்ள வேண்டும்....
இவைகள் அனைத்தையும் அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்ச வேண்டும்...
காய்ச்சிய இந்த எண்ணெயை வடிகட்ட வேண்டும்....
இந்த எண்ணெயை தலையில் தேய்க்க கிழவனுக்கும் குமரன்போல் முடி வளரும்,.....

1 பலம் = 35 கிராம்

No comments:

Post a Comment