+2 மாணவர்களுக்கு வகுப்பு நடத்த கூடாது - ஆசிரியர் மலர்

Latest

24/04/2021

+2 மாணவர்களுக்கு வகுப்பு நடத்த கூடாது

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தபொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பிளஸ் 2 மாணவர் களுக்காக பள்ளிகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக இணை இயக்குநர் மைக்கெல் பென்னோ,பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக தேர்வுத்துறை இயக்கு நரின் அறிவுறுத்தலின்படி மே 5-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த தமிழக கல்வி வாரியத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு, தமிழக கல்வி வாரிய இயக்குநரால் தேர்வு நடைபெறும் 15 நாட்களுக்கு முன் னதாக தெரிவிக்கப்படும்.

பொதுத்தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளதால் மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பிளஸ் 2மாணவர்களுக்கு எந்த வடிவம்அல்லது முறையிலும் வகுப்புகளைநடத்தக் கூடாது.

பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்த நோக்கத்துக்காகவும் பள்ளிக ளுக்கு வர அறிவுறுத்தக் கூடாது.

கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவி வரும் நிலை யில் பள்ளிகளில் வகுப்புகள், நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகள், படிப்பில் சுமாரான மாணவர்க ளுக்கான சிறப்பு வகுப்பு, டியூசன்உள்ளிட்ட எந்தவித கல்வி நடவடிக்கைகளையும் எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக் கூடாது.

இவற்றை மிகவும் கண்டிப் பாக கடைபிடிக்க வேண்டும். இதுதொடர்பான விதிமீறல் மற்றும் புகார்கள் தீவிரமாக பார்க்கப்படும்.

விதிமீறல்களுக்கு குறிப் பிட்ட பள்ளியே முழுப் பொறுப் பேற்க வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளை எந்த வடிவத்தில் அல்லது முறையிலும் நடத்தக் கூடாது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459