பிரதமருடன் இணையவழியில் கலந்துரையாடல்; பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய ஆன்லைனில் போட்டி: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பிரதமருடன் இணையவழியில் கலந்துரையாடல்; பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய ஆன்லைனில் போட்டி: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை

 

640452

பிரதமருடனான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களை தேர்வுசெய்ய, ஆன்லைனில் நடத்தப்பட்டு வரும்படைப்புத்திறன் போட்டி குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர்எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்டமுதன்மை கல்வி அதிகாரிகளுக்குஅவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பள்ளி மாணவர்களின் தேர்வுபயத்தை போக்கும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சியை மத்திய பள்ளிக்கல்வித் துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த நேரடி கலந்துரையாடல் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாகமார்ச் 3-வது வாரத்தில் நேரடி நிகழ்வாக இல்லாமல் இணையவழி வாயிலாக நடத்தப்பட உள்ளது.

இந்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 2 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்வதற்காக படைப்புத்திறன் போட்டி கடந்த பிப் 18-ல் தொடங்கிமார்ச் 14 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. www.innovateindia.mygov.in/ppe2021 என்ற இணையதளத்தில் ஆன்லைனில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 9 முதல்12-ம் வகுப்பு மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டி) இயக்ககத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் முன்வைக்கும் கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கேள்விகளுக்கு பிரதமர் கலந்துரையாடலின்போது பதில் அளிப்பார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகுறித்த தகவல்களை அனைத்துபள்ளிகளுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment