வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்? - ஆசிரியர் மலர்

Latest

15/02/2021

வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்?

 1613368655239


கணக்குத் தணிக்கை தேவைப்படும் கணக்குகளுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். தவறுவோருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.


ஒவ்வொரு நிதியாண்டிலும் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ம் தேதி நிறைவடையும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2019-2020 நிதியாண்டில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகசாம் அடுத்தடுத்து நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக தனி நபர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டது.


கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்யப்படும் கணக்குகளுக்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க எழுந்த கோரிக்கைகளை நிராகரித்த மத்திய நிதியமைச்சகம், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்தது.


அதன்படி, கடைசி நாளான இன்று வருமான வரி தாக்கல் செய்ய தவறுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி வரை 2019-20ஆம் நிதியாண்டிற்கு, 4 கோடியே 95 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.. இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது 5 சதவிகிதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459