ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை மாநில அரசு அதே ஊதியத்தை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதியத்தை மாநில அரசு அதே ஊதியத்தை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை

 


IMG_20210110_224332

IMG_20210110_224347ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் (அனைவருக்கும் கல்வி இயக்கம்-SSA மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்-RMSA) தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் 1500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினி விவரப்பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர்கள், பொறியாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகிய பணிநிலைகளில் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் (2002 முதல் 2012 வரை), மாவட்ட அளவில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மூலம் தொகுப்பூதியத்தில் (2014-15) முதல் வெவ்வேறு காலங்களில் பணியமர்த்தப்பட்டு தற்போது 5 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வருகிறோம். 

2014ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியமானது 2007 முதல் 2013 வரை இத்திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த வட்டார கணக்காளர்கள் மற்றும் கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கு ஒரே ஊதியம் (PAY 8400 + FTA 1500 = 9900) என நிர்ணயிக்கப்பட்டது. இவர்களிடையே பணியில் சேர்ந்த நாள் கணக்கிட்டு எந்த வித ஊதிய வேறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 15 சதவீத ஊதிய உயர்வு  2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு ஒரு  நிதியாண்டு பூர்த்தியாகவில்லை என்றும் இந்த ஊதிய உயர்வு இவா்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2017 இல் வழங்கப்பட்ட 20 சதவீத ஊதிய உயர்வானது 1.4.2015க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதிகள் பின்பற்றப்படுகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (RMSA) இணைந்து ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இவர்களுக்கு தற்போது எவ்வாறு பணியில் சேர்ந்த நாள் கணக்கிடப்பட்டது என்று தெரியவில்லை. 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மத்திய அரசு PAB-ல் ஒதுக்கீடு செய்துள்ள நிதியை ஊதியமாக வழங்கிவிட்டோம் என்று உண்மைக்குப் புறம்பான தகவலை மத்திய அரசின் கல்வித்துறை இணை செயலாளருக்கும், நகலினை தமிழக கல்வித்துறை இணை செயலாளருக்கும், தொகுப்பூதியப் பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொகுப்பூதியப் பணியாளர்களிடையேயும் மிகுந்த மனவருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பணியில் சேர்ந்த நாள் கணக்கிட்டு ஊதியம் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறெனில் அனைவருக்கும் இடைநிற்றல் கல்வி இயக்கத்திலிருந்து ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு வந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்து வருகின்றார்கள், அவர்களுக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஒரே ஊதியமே வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி அடிப்படையில் என்று எடுத்துக்கொண்டால் பனிரெண்டாம்  வகுப்பு (+2) கல்வித் தகுதிக்கும், இளநிலை பட்டப்படிப்பு (UG Degree) முடித்தவர்களுக்கும் ஒரே ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே திட்டத்தில் எட்டாவது (8th) முடித்தவர்கள் ஊதியத்துடன் ஒப்பிடுகையில் +2, UG Degree முடித்தவா்களின் ஊதியம் மிகவும் குறைந்துள்ளது.

புதிய ஊதிய நிர்ணய செயல்முறைகளில் மாநில அளவில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஓய்வுப்பெற்ற அலுவலா்களுக்கு 100 சதவீத ஊதிய உயா்வும், வட்டார அளவில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வும் என சமூக நீதிக்கு எதிரான ஊதிய நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பாடான ஊதிய நிர்ணயம் செய்த பிறகும் மத்திய அரசு ஒதுக்கிய PAB ஊதியம் வட்டார அளவிலான பணியாளா்களுக்கு கிடைக்கவில்லை என்பதை பணிவுடன் தெரவித்துக்கொள்கிறோம். 

சமூக நீதியை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தமிழகம் 16.11.2020 வழங்கப்பட்ட மாநில திட்ட இயக்குனர் புதிய ஊதிய நிர்ணயம் மற்றும் ஊதிய உயர்வு செயல்முறை ஆணை பல்வேறு முரண்பாடுகளை கொண்ட ஊதிய நிர்ணய செயல்முறைகளை ரத்து செய்து, அனைத்து  தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் மத்திய அரசு PAB-யில் வழங்கிய நிதியை ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டிட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a comment