தமிழ் தெரிந்தாலே ரூ.50000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ் தெரிந்தாலே ரூ.50000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க

 


தென்காசி : திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள் 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700/- ஊதியத்திலும் மற்றும் 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் ரூ.3000/- தொகுப்பூதியத்திலும் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் • சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். • 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். • திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல்மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என தனது அறிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.'! (?)

No comments:

Post a comment