கைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி!

 


தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவைாய்ப்பு அறிவிப்பானது உதவி பொது மேலாளர், மேலாளர், மேலாளர் மற்றும் ஆலோசகர் ஆகிய பணிகளுக்காக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த பணிக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த பணிகளுக்கு தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் டிசம்பர் 8-ஆம் தேதி ஆகும்.
உதவி பொது மேலாளர் பணிக்கு எம்பிஏ/ இன்டர்நேஷனல் பிசினல்/ பிசினஸ் அனலிட்டிக்ஸ்/ இன்வெஸ்ட்மென்ட் / புராஜெக்ட் மேனேஜ்மென்ட் ஸ்ட்ரீம்ஸ்/ சார்ட்ர்ட் பைனான்சியர் அனாலிஸ்ட்/ சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி படித்தவர்கள் விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அக்கவுன்ட்ஸ் ஆபிசர் அல்லது மேனேஜர் பணிக்கு சிஏவுடன் காமர்ஸ் பிரிவில் டிகிரி படித்திருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு ஏசிஎஸ் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அது போல் கன்சல்டன்ட் பணிக்கு சிஏ, முதுகலை பட்டம், எம்பிஏ, எல்எல்பி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பொது மேலாளர் பணிக்கு ரூ 59, 300 முதல் ரூ 1,87,700 வரை சம்பளம் கிடைக்கும்.
அது போல் அக்கவுன்ட்ஸ் அதிகாரி அல்லது மேனேஜர் பணிக்கு ரூ 56,100 முதல் ரூ 1,77,500 வரையும் கன்சல்டன்ட் பணிக்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். இதில் ஏஜிஎம் பணிக்கு 3 பணியிடங்களும் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், மேனேஜர் பணிகளுக்கு தலா ஒரு இடங்களும், கன்சல்டன்ட் பணிக்கு 4 இடங்களும் உள்ளன. ஏஜிஎம் பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச 33 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். மேனேஜர் பணிக்கு 23 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். கன்சல்டன்ட் பணிக்கு 35 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும்.இதற்கான மேலும் விவரங்களை Titco gov.in.
என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு வாய்மொழி நேர்காணல் மூலம் எடுக்கப்படும். இது முழுக்க முழுக்க ஒப்பந்த பணியாகும்.

No comments:

Post a comment