புரெவி புயல் : ஆறு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - ஆசிரியர் மலர்

Latest

03/12/2020

புரெவி புயல் : ஆறு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை


 சென்னை:புரெவி புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு நாளை (04 ம் தேதி)பொது விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.வங்க கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் இன்று இரவு பாம்பன் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீட்டைவிட்டுவெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Click here to download government order

இதனிடையே தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை (4 ம் தேதி)பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் கூறிஇருப்பதாவது மேற்கண்ட 6 மாவட்ட மக்கள் அத்தியாவசிய தேவையின்றி பிற பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நான்கு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

அரியலூர், நாகை , தஞ்சை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459