தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பா ?முழு விவரம்... - ஆசிரியர் மலர்

Latest

01/12/2020

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பா ?முழு விவரம்...

 


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இல்லை. எனவே தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.


* டிசம்பர் 14 முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி


* தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் 


* மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் டிசம்பர் 7 முதல் வகுப்புகள் தொடங்கும்


* விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி


* டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி


* வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி


* டிசம்பர் 1 முதல் உள்ள உள்அரங்கங்களில் சமுதாய ,அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


* அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள்ள அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.

1

2
5

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459