2020-21 ஆம் கல்வியாண்டு - பள்ளி மானிய தொகையை பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் - ஆசிரியர் மலர்

Latest

11/12/2020

2020-21 ஆம் கல்வியாண்டு - பள்ளி மானிய தொகையை பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல்

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கேற்றவாறு தேவையான வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த பள்ளிமானியம் வழங்கப்படுகிறது


பார்வை 1 ல் காண் மாநில திட்ட இயக்குநர்(சமக்ரா சிக்ஷா) அவர்களின் கடிதத்தில் வழங்கப்படுள்ள தெளிவுரைகள் மற்றும் வழிகாட்டுதளின் அடிப்படையில் 2020-21 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டு UDISE தரவின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப அனைத்து அரசு ஊராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், வனத்துறை, சமூக நலத்துநையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் வழங்கும் பொருட்டு அட்டவணை 1-ல் உள்ளவாறு சார்ந்த வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்து ஆணை வழங்கப்படுகிறது


எனவே அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), வட்டார வளமைய வங்கிக் கணக்கில் நிதி பெறப்பட்டவுடன் சார்ந்த பள்ளிகளுக்கு உடனடியாக நிதியை விடுவித்து மாநில திட்ட இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) குறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தி தெரிவித்தல் வேண்டும்


பள்ளிமானியம் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் (சமக்ரா சிக்ஷா) அவர்களின் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு.


தற்போது காணப்படும் கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட ஏற்பளிப்புக் குழுவின் கூட்ட அறிக்கை பக்கம் 13 ல் பள்ளிமானித் தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான வழிகாட்டுதல்களும் (மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது) வழங்கப்பட்டுள்ளது.


* ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தொகையில் 10 சதவீதம் முழு சுகாதார திட்டத்திற்கு (Swachhta Action Plan) பயன்படுத்தவும் ஏனைய ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தொகையை சட்ட திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிதி நெறிகள் மற்றும் திட்ட விதிமுறைகளின் படி பயன்படுத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


பார்வை அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


பள்ளி பார்வையின்போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் பொருள்கள் வாங்கப்பட்டதையும் அதற்கான பற்றுச்சீட்டுகள் , ரொக்கப் பவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.



Click here to download CEO proceedings

பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதை


உறுதி செய்ய வேண்டும்


பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்


ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் EMISல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.


செலவு விவரத்தினை


பள்ளி மானியத் தொகை முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் பெற்று மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழை 28.02.2021 க்குள் மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459