School Emis தளத்தில் ஆசிரியரின் சுயவிவரத்தை (Teacher profile) பொதுத்தொகுப்பிற்கு (Common pool) எவ்வாறு நகர்த்துவது? - ஆசிரியர் மலர்

Latest

16/11/2020

School Emis தளத்தில் ஆசிரியரின் சுயவிவரத்தை (Teacher profile) பொதுத்தொகுப்பிற்கு (Common pool) எவ்வாறு நகர்த்துவது?

 


ஒரு பள்ளியில் உள்ள ஆசிரியரின் சுயவிவரத்தை (Teacher profile) பொதுத்தொகுப்பிற்கு (Common pool) எவ்வாறு நகர்த்துவது?


பள்ளி EMIS தளத்தில் உள்ள STAFF LIST இல் இருந்து ஓர் ஆசிரியரை கீழ்க்கண்ட காரணங்களுக்காக பொதுத் தொகுப்பிற்கு (Common pool) அனுப்பும் வசதி உள்ளது.


1.Transferred to school/ office

2.Retired/VRS

3.Resignation

4.Expired

5.Suspension/Departmental Action

6.Duplicate entry

7.Other


Staff list இல், Common Pool-க்கு நகர்த்த வேண்டிய ஆசிரியரின் பெயருக்கு நேரேதிரே இருக்கும் Action என்ற கலத்தில் கொடுக்கப்பட்டுள்ள Right arrow icon ஐ அழுத்தி சரியான காரணத்தை தேர்வு செய்து SAVE செய்த உடன் TRANSFER REQUEST RAISED என்ற Notification வரும். அந்த Request இன் உண்மைத்தன்மையை சார்ந்த அலுவலர்களுடன் உறுதி செய்த பின்னர் CEO Login மூலம் Teacher Request approval வழங்கப்படும். அவ்வாறு வழங்கிய பின்னர் அந்த விவரம்(Profile) பொது தொகுப்பிற்கு (Common pool) சென்றுவிடும். சுயநிதி பள்ளிகளை பொறுத்தவரை, ஓர் ஆசிரியரின் சுயவிவரத்தை (profile) நேரடியாகவே பொதுத்தொகுப்பிற்கு அனுப்பலாம். CEO login மூலமாக approval வழங்க தேவையில்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459