RTE சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - ஆசிரியர் மலர்

Latest

07/11/2020

RTE சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

 


தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பிக்க சனிக்கிழமை கடைசி நாளாகும்.கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். தமிழகத்தில்10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டன.

எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்நிலையில், சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் சனிக்கிழமையுடன் (நவ.7) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள்  இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட சோ்க்கைக்கு ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459