நிவர் புயல் எங்கே கரையை கடக்கும் : தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன ? - ஆசிரியர் மலர்

Latest

25/11/2020

நிவர் புயல் எங்கே கரையை கடக்கும் : தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன ?


 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயலின் நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள விளக்கத்தின்படி,

நிவர் புயலானது சரியாக எங்கே கடக்கும் என உறுதியாக சொல்லமுடியவில்லை. ஐரோப்பா, பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனிய வானிலை ஆய்வு மையங்களின் தகவலின்படி,நிவரானது புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் வானிலை மையங்கள் காரைக்கால் – பரங்கிப்பேட்டை அருகே கரையை கடக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளன. என்னுடைய கணிப்பின்படி இந்த புயக் வலுவிழந்தால் அது டெல்டா பக்கம் திரும்பலாம். ஆனால் இது தீவிரமாக இருப்பதால் டெல்டா பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை.அதனால் டெல்டாவிற்கு மழை இருக்குமே தவிர நிவர் புயல் டெல்டாவிற்கானது அல்ல.

எனவே சில கணிப்புகளின்படி நிவர் புயலானது புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே மகாபலிபுரம்-கல்பாக்கம் இடையே கரையைக் கடக்கத்தான் வாய்ப்பு உள்ளது. இது இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கலாம். மகாபலிபுரத்துக்கும் சென்னைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் சிறிது மாற்றம் என்றாலும் இந்தப்புயல் சென்னையில் கரையைக் கடக்கலாம்.

கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மழை உண்டு. உள் மாவட்டங்களுக்கு நாளை மழை இருக்கும். புயலில் பாதைக்கு ஏற்ப எந்தெந்த உள் மாவட்டங்கள் மழை பெறும் என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459