ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/11/2020

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய கோரிக்கை


 கரோனோ தொற்று காலத்தில் குறைக்கப்பட்டுள்ள பள்ளி பாடத்திட்டத்தை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய சார்பில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் ஆலோசனைபடியும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வழிகாட்டலில் செயற்குழு கூட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர் நாயகம் ,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் முகேஷ், கல்வி மாவட்ட செயலாளர் பிரவீன் குமார், கல்வி மாவட்ட பொருளாளர் ஜோதிபாசு,  ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

1.கரோனோ காலத்தில் குறைக்கப்பட்டுள்ள பள்ளி பாடத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்


2. தற்போது வழங்கிவரும் சத்துணவு திட்டத்தை பன்னிரெண்டாம் வகுப்பு வரை வழங்க வேண்டும்.3. என்.எம்.எஸ் என்.டி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.4. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


5. கரோனோ  காலத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


7. மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித் தனியாக அளவெடுத்து தைத்து  வழங்க வேண்டும்.


8. தொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்ட நாளை கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.


9. கரோனோ காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனசெயற்குழுவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணேஷ் பூபதி, ரவீந்திரன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தெய்வீகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி, ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்,ஒன்றிய துணைத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக பொருளாளர்  பழனிச்சாமி  நன்றி கூறினார்.

இலவசமாக IPL match பார்பதற்கு oreo tv பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459