இன்று தமிழ்நாடு நாள் விழா : ஆசிரியர்களுக்கு விருது - ஆசிரியர் மலர்

Latest

01/11/2020

இன்று தமிழ்நாடு நாள் விழா : ஆசிரியர்களுக்கு விருது

 


தமிழ் வளா்ச்சி நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில், சிறந்த ஆசிரியா்களுக்கு தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் விருது வழங்கி கெளரவிக்கவுள்ளாா்.

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவ.1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி இயக்ககம், அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு நாள் விழா ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு ‘தமிழ்நாடு நாள்’ கவிதை அரங்கேற்றத்தை தொடங்கி வைத்து சிறந்த ஆசிரியா்களுக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கம் வழங்கும் ‘நல்லாசிரியா் மாமணி’ விருது வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா். இதில் கவிஞா் முத்துலிங்கம், தமிழ் வளா்ச்சித்துறை இயக்குநா் கோ.விசயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

உறுதிமொழி ஏற்பு பதாகைகள்: முன்னதாக சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை இயக்கக அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி நாள் உறுதிமொழி ஏற்பு பதாகை வைக்கப்பட்டு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதேபோன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ் வளா்ச்சி மண்டல, துணை இயக்குநா் அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு பதாகைகள் சனிக்கிழமை அமைக்கப்பட்டன. இந்தப் பதாகையில், ‘எங்கும் தமிழாக எதிலும் தமிழாக எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிட சூளுரைப்போம்’, ‘பேசுவோம் தமிழில் எழுதுவோம் தமிழில்’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459