மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

 


மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

மருத்துவ கலந்தாய்வு (கோப்புப்படம்)

அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதில் விளையாட்டு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் அனைத்து இடங்களும் நிரம்பிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இருந்த 132 இடங்களில் 41 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இதனால் 91 இடங்கள் காலியாகின.

இந்த நிலையில் மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. அதன்படி முதல் நாளில் தரவரிசை பட்டியலில் 1 முதல் 361 வரையில் இருப்பவர்களுக்கு (நீட் தேர்வு மதிப்பெண் 710 முதல் 631 வரை) அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 2 மணி என 3 கட்டங்களாக நடக்க உள்ளது. மாணவ-மாணவிகள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment