சென்னை மாவட்டத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் :கணக்கெடுப்பு பணி தொடக்கம் - சென்னை மாவட்ட ஆட்சியர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்னை மாவட்டத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் :கணக்கெடுப்பு பணி தொடக்கம் - சென்னை மாவட்ட ஆட்சியர்


 சென்னை மாவட்டத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகள் உள்ளிட்டோரைக் கணக்கெடுப்பு பணி தொடங்குவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை மாவட்டத்தின் பள்ளி செல்லாக் குழந்தைகள், 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற குழந்தைகள் மற்றும் 1 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்தப் பணி இன்று (நவ.21) முதல் டிச.10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மண்டல மேற்பாா்வையாளர்கள், ஆசிரியா் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களால் இந்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a comment