தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/11/2020

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

 


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்.உதவித் தொகை வரும் காத்திருக்காமல் உடனடியாக செலுத்தும் விதமாக சுழல் நிதி ஒதுக்கப்படும். அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்தே திமுக அறிவித்திருப்பது நாடகம் என முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு மாணவர்களுக்கான மருத்துவ கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்- மு.க.ஸ்டாலின்முன்னதாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தற்போது முதல்வரும் அவ்வாறே அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459