மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் - குடும்ப நலத்துறை இயக்குநர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/11/2020

மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் - குடும்ப நலத்துறை இயக்குநர்

 


சென்னை,

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் பெற்றோர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,  மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று  குடும்ப நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வைட்டமின் மாத்திரைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் 
அனைத்து பள்ளிகளுக்கும் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக் கேட்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459