பள்ளிகள் திறப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் - ஆசிரியர் மலர்

Latest

18/11/2020

பள்ளிகள் திறப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 


சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு புதன்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள் கட்டனம் வசூலிக்க விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிபதிகள்,  தனியார் பள்ளிகள் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தை பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம், 35 சதவீத கட்டணத்தை தவணை முறையில் வசூலிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.

மேலும், முழு கட்டணத்தை வசூலித்த பள்ளிகள் குறித்த நவம்பர் 27ஆம் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும், தவறினால் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என தெரிவித்தனர்.

இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459