கேட் தேர்வு விண்ணப்பத்தில் தேர்வர்கள் திருத்தங்களை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கேட் தேர்வு விண்ணப்பத்தில் தேர்வர்கள் திருத்தங்களை மேற்கொள்ள இன்றே கடைசி நாள்நாடு முழுவதும் உள்ள உட்பட மத்திய நிறுவனங்களில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர ‘கேட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 27 பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான இத்தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 2021 பிப்ரவரி 5, 6, 7, 12, 13, 14-ம் தேதிகளில் பாடப் பிரிவு வாரியாக நடக்க உள்ளன. இத்தேர்வை மும்பை நடத்த உள்ளது.

இதற்கான இணைய வழியிலான விண்ணப்ப பதிவு கடந்த செப்.11 முதல் அக்.14-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களில் மாணவர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு இன்று (நவ.13-ம் தேதி) வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இதன்படி, மாணவர்கள் விண்ணப்பங்களைத் திருத்த இன்றே கடைசி நாள் ஆகும். தேர்வு எழுதுவதற்கான நகரங்களைக் கட்டணமின்றி மாற்றிக் கொள்ளலாம். பாடப் பிரிவு, பாலினம் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்யக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மும்பை அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட் ஜனவரி 8-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a comment