851 மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

851 மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்

 


எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர். 


இந்த வருடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 


அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும். 


இடையில் சேர்ந்து படித்தாலோ, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தாலோ கிடைக்காது. இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் 747 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 


இது தவிர கடந்த வருடம் படித்த மாணவர்கள் 113 பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a comment