அசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/11/2020

அசையாமல் நின்ற நிவர் நகர தொடங்கியது.. அதி தீவிர புயலானது.. 145 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசும்


சென்னை: நிவர் புயல் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அதிதீவிர புயலாக மாறி, நாளை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் மதியம் வரை வங்கக்கடல் பகுதியில் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தது நிவர். இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவுக்கு செய்தியாளர்களை சந்தித்தார் பாலச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் காலை முதல் மாலை வரை சுமார் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது எதிர்பார்த்த மழை தான். புயல் எச்சரிக்கை கூண்டு - துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம் தெரியுமாநிவர் புயல் இருக்கும் இடம்நிவர் புயல், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கு பகுதியில், சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது அது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கியுள்ளது.தீவிர புயல், பிறகு அதி தீவிர புயல்அடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி வீசும். வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.145 கி.மீ வேகம்புயல் கரையை கடக்கும்போது, அருகிலுள்ள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.புயலில் மாற்றம்திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்யும். புயல் கரையை கடக்கும் இடத்தில் இதுவரை மாற்றம் இல்லை. அதன் வேகம்தான் மாறியுள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்றவருடம், கஜா புயல் கரையை கடந்தபோது, 140 கி.மீ வேகத்தில் காற்றை வீசி சுழன்று அடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment