10, டிப்ளமோ கல்வி தகுதிக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10, டிப்ளமோ கல்வி தகுதிக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு

 


இந்திய அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குநரகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: Department of Atomic Energy, Directorate of Purchase & Stores
மொத்த காலியிடங்கள்: 74
பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: Stenographer Grade-II (Group ‘B’ Non-Gazetted) – 02
சம்பளம்: மாத்ம் ரூ.35,400 + இதர சலுகைகள்.
பணி: Stenographer Grade-III (Group ‘C’ Non-Gazetted) – 04

பணி: Upper Division Clerk (Group ‘C’ Non-Gazetted) – 05
பணி: Junior Purchase Assistant/ Junior Storekeeper (Group ‘C’ Non-Gazetted) – 63
சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன், தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், வணிகவியல், அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்ம்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 27.12.2020 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://dpsdae.formflix.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 27.12.2020

மேலும் விவரங்கள் அறிய
https://dpsdae.formflix.in/notification.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

 

No comments:

Post a comment