தடய அறிவியல் துறையில் பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க : TNPSC அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தடய அறிவியல் துறையில் பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க : TNPSC அறிவிப்பு

 


தடய அறிவியல் துறையில் பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:”தடய அறிவியல் துறையில் உள்ள பதவி மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு 2019 ஆகிய பதவிகளுக்கான முறையே முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 07.10.2020 முதல் 14.10.2020 மாலை 5.30 மணி வரை அரசு வேலை நாட்களில் தங்களது மூலச் சான்றிதழ்களை அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவர்களுக்குத் தெரிவில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று கருதி, அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் இ-சேவைகளின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment