பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 


அமராவதி நகர்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆந்திராவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளை அக்.,5ம் தேதி (நேற்று) திறக்க முடிவு செய்திருந்தது.

இதையடுத்து மாநிலத்தின் விஜயநகரத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றில் ஆசிரியர்களிடம் சந்தேகங்கள் கேட்க வந்த 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிகள் திறப்பை வரும் நவம்பர் மாதம் 2ம் தேதிக்கு மாநில அரசு தள்ளி வைத்துள்ளது.

இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது,‛ மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை பள்ளிக்கு வந்த முதல் நாள் அன்று (அக்.,5) நடந்துள்ளது. எனவே இவர்களுக்கு பள்ளியில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இவர்கள் பள்ளிக்கு வரும் முன்னரே வெளியிடங்களில் கொரோனா கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்’ இவ்வாறு தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில அரசு அக்., 5ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பள்ளிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment