தமிழ்நாடு...மாவட்ட வாரியான கொரோனா அப்டேட்.. - ஆசிரியர் மலர்

Latest

10/10/2020

தமிழ்நாடு...மாவட்ட வாரியான கொரோனா அப்டேட்..

 


.மாவட்ட வாரியான கொரோனா அப்டேட்...இன்றும் கோவை சேலத்தில் அதிகம்!! தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. சென்னையில் இன்றும் மட்டும் 1272 பேருக்கும், கோவையில் 392 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 160 பேருக்கும், நாமக்கல்லில் 153 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், திருவள்ளூரில் 199 பேருக்கும், திருப்பூரில் 183 பேருக்கும், வேலூரில் 132 பேருக்கும், ஈரோட்டில் 161 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மாநிலத்திலேயே இன்று குறைவாக ராமநாதபுரத்தில் 18 பேருக்கும், தென்காசியில் 21 பேருக்கும், பெரம்பலூரில் 17 பேருக்கும், அரியலூரில் 31 பேருக்கும், திண்டுக்கல்லில் 38 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவையில் 4 பேரும், திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரியில் தலா மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிய கொரோனா தொற்று 5242... டிஸ்சார்ஜ் 5,222... உயிரிழப்பு 67!! இன்னும் சென்னையில் 13,577 பேரும், கோவையில் 4,919 பேரும், செங்கல்பட்டில் 2,316 பேரும், கடலூரில் 1,206 பேரும், ஈரோட்டில் 1,068 பேரும், நாமக்கல்லில் 1,080 பேரும், சேலத்தில் 2,319 பேரும், தஞ்சாவூரில் 1,057 பேரும், திருவள்ளூரில் 1,544 பேரும், திருப்பூரில் 1,117 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை மாநிலம் முழுவதும் 10,187 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இன்னும் 44,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,97,033 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459