வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/10/2020

வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு

 


தமிழ்நாடு வேளாண் பல்கலை கல்வி நிலையங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 3,644 விண்ணப்பங்கள் வந்துஉள்ளன


.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தமிழகத்தில் மூன்று உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.


நடப்பு கல்வியாண்டில், 860 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, செப்., 10ல் துவங்கியது. இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, அக்., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.


அக்., 16 நள்ளிரவு, 12:00 மணி வரை, 3,644 விண்ணப்பங்கள், இணையவழியில் பதிவு செய்யப்பட்டுஇருந்தன. தபால் வாயிலாக, அக்., 21 மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். பட்டயப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்படுகிறது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459