தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/10/2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

மத்திய அரசு நாடு முழுவதும் முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகளைத் திறந்துகொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.  

 

அதன் அடிப்படையில் சில மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என நவம்பர் 11-ம் தேதிக்குள் அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

 

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

 

இந்த ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ்  பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

 

இந்நிலையில், இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில், பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்றும்,  பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.-Thanthi

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459