மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!!
 

லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் அறிவித்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் வயது 74,டெல்லி தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இவரது மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில், ''பப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன் பப்பா'' என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் தனது தந்தையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.மாபெரும் வெற்றி இன்று போஸ்டர் போட்டு காலத்தை ஓட்டும் டுபாக்கூர் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஜெயிச்சா இப்படி ஜெயிக்கணும்.. மாபெரும் வெற்றின்னா அது இதுதான் என்று சொல்லி அடித்தவர் ராம் விலாஸ் பாஸ்வான். 1989ம் ஆண்டு அது.. நாடாளுமன்றத் தேர்தல் களை கட்டியிருந்தது. பீகாரின் ஹாஜிப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் ராம் விலாஸ் பாஸ்வான். 1977ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு மிகப் பிரமாதமான வெற்றியைப் பெற்றிருந்த நிலையில் 1989 தேர்தலை சந்தித்திருந்தார் பாஸ்வான்.1977ல் அவர் காங்கிரஸ் வேட்பாளர் பாலேஸ்வர் ராம் என்ற தலைவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 545 வாக்குகள் என்ற பிரமாண்ட வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவையே அதிர வைத்திருந்தார்.

இந்தத் தேர்தலில் பாஸ்வானை வேட்பாளராக நிறுத்தியவர் மாபெரும் தலைவர் ஜெய பிரகாஷ் நாராயண் ஆவார். ஆனால் 1989ம் ஆண்டு தேர்தலில் மேலும் ஒரு சாதனையைப் படைத்தார் பாஸ்வான். ஜனதாதளம் சார்பில் பாஸ்வான் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் மகாபீர் பாஸ்வான் நின்றார். அவரை தேர்தலில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 448 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நாட்டையே ஆச்சரியப்படுத்தினார் பாஸ்வான்.  பாஸ்வான் அதுதான் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் பெற்ற பிரமாண்ட வெற்றியாகும். அந்த வெற்றிக்குப் பிறகு பாஸ்வானும், ஹாஜிப்பூரும் பிரிக்க முடியாத இரட்டையர்களாகிப் போனார்கள். தொடர்ந்து அந்தத் தொகுதியில் பாஸ்வானே வென்று வந்தார். இடையில் 2009ம் ஆண்டு மட்டும் ஹாஜிப்பூர் பாஸ்வானை கைவிட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் தொகுதியை வென்றார். 2019 தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தனது தம்பியை நிறுத்தினார். இனி தான் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பையும் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார் பாஸ்வான். இப்போது நிரந்தரமாக ஹாஜிப்பூரை விட்டு அவர் பிரிந்து போய் விட்டார்.ராம் விலாஸ் பாஸ்வான்.

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் 1946ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி பீகார் மாநிலத்தில் இருக்கும் ககாரியா என்ற இடத்தில் பிறந்தார். . சட்டப் படிப்பை முடித்துள்ளார். பீகார் மாநிலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி டிஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார். ஆனாலும், அரசியல்தான் இவரது மூச்சாக இருந்தது. இதையடுத்து அரசியலில் நுழைய ஆர்வப்பட்டவர் சம்யுக்தா சோஷியலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இதையடுத்து பீகார் மாநிலத்தில் தன்னை  சிறுபான்மை மக்களின் தலைவராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.முதன் முறையாக 1960ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். இதையடுத்து அந்தக் கட்சியின் இணை செயலாளராக தேர்வு பெற்றார்.

இதையடுத்து, நான்கு ஆண்டுகள் கழித்து பீகார் மாநிலத்தில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிறிய கட்சிகளை இணைத்து பீகாரில் பெரிய தலைவராக உருவெடுத்தார்.கைதுஇதையடுத்து இவரது அரசியல் களம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. இதற்குக் காரனம 1975ஆம் ஆண்டில் எமர்ஜென்சியின்போது இவரை இந்திரா காந்தி கைது செய்து சிறையில் அடைத்தார். 1977ஆம் ஆண்டில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.தோல்விஇதன் பின்னர் பீகார் மாநிலத்தில் இருந்து தொடர்ந்து எட்டு முறை லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். 1984, 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவர் தோல்வியை தழுவினார். 2009 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்து இருந்தாலும், பீகாரில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு பெற்று இருந்தார்.லோக் ஜனசக்தி கட்சிஇதன் பின்னர் 1985ஆம் ஆண்டில் லோக் தளம் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு பெற்றார். இதையடுத்து 1987ல் ஜனதா கட்சிக்கு சென்றார். இதன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றார். இந்தக் கட்சி 2000வது இரண்டாக உடைந்தது. பாஜகவில் இணைவதை எதிர்த்து தனிக்கட்சி துவங்கினார். அதுதான் லோக் ஜனசக்தி கட்சி.

No comments:

Post a comment