தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசால புத்தாக்க பயிற்சி. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசால புத்தாக்க பயிற்சி.

 


புதுக்கோட்டை,அக்.8:புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அவர்களின் அறிவுரையின் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் படி  ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ர சிக்ஷா  இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இனையவழி‌ மூலம் இன்னோவேட்டிவ் பாதசாலா என்ற தலைப்பின் கீழ் புத்தாக்க பயிற்சியினை வழங்கி வருகிறது.


இப்பயிற்சியை  ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டியின் பயிற்றுனர் மகேஷ் பாலன்  வழங்கினார்.


இப்பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த சுமார் 15 அரசு பள்ளிகளைச் சேர்ந்த  80 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


இப்பயிற்சியானது புதுக்கோட்டை மாவட்டம் மட்டும் அல்லாது  மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர்,

கன்னியாகுமரி போன்ற தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது.


இப்பயிற்சியினை  ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், வழிகாட்டுதலின் பேரில் பிற பயிற்சியாளர்களான தினேஷ், மணிகண்டன் ,செல்வி, மணிமேகலை ஆகியோர் மூலம் 12 வாரங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.


பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின்  மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை செய்திருந்தனர்.

No comments:

Post a comment