ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்.

 அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 30.9.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்.


1 ) பார்வை 6 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் ஆணைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது 

இவ்வாணையில் , தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 30.09.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது . அரசாணை ( நிலை ) எண் .231 பள்ளிக் கல்வித் துறை நாள் 11.08.2010 ல் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி , ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது அரசாணை ( நிலை ) எண் 201 பள்ளிக் கல்வி ப.க .52 த் துறை நாள் 20.12.2018 இல் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . 

2 மேற்படி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் , EMIS இணையதளப்பதிவு போன்ற தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் துல்லியமாக சரிபார்க்க வேண்டும் . அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் வழங்குவதற்கு மேற்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் . அவ்வாறு இணையதள பதிவுகள் வாயிலாக சரிபாக்கும்போது போலியான மாணவர்கள் எண்ணிக்கை கண்டறியப்பட்டால் போலியாக கணக்கிடப்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா நலதிட்டங்கள் பெற்றதற்கு அப்பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

PDF

Touch Here

No comments:

Post a comment