அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் : மத்திய அரசு கடிதம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் : மத்திய அரசு கடிதம்

 


சென்னை, 

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் ஏற்கனவே மாநில அரசால் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பிரச்சினை ஏதாவது வந்துவிடும் என்பதால், அதில் எந்த பிரச்சினையும் இருக்காது என மத்திய அரசு உறுதி அளித்தால் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளிக்க முடியும் என தமிழக அரசு தெரிவித்துவிட்டது மேலும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதும், தமிழக அரசு தங்களுடைய பங்களிப்பாக நிதி அளிக்க கோரி இருந்தது. ஆனால் அதற்கான போதுமான நிதி இல்லை என்று அரசு கையை விரித்தது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசிடம் அந்த நிதியை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம், கல்வி கட்டணம், இணைப்பு கட்டணம் உள்பட உள்வளங்களில் இருந்து வரும் வருவாயை கொண்டு நிவர்த்தி செய்யமுடியும் என கடிதம் மூலம் தெரிவித்தார்.
இதனை மத்திய அரசு, அதிகாரமளிக்கும் குழுவுக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழு பரிசீலித்த பின்னர், துணைவேந்தர் கடிதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போதுமான நிதியை அவரால் பெறமுடியாவிட்டால், அதனை ஈடுசெய்வதற்கு தமிழக அரசு உத்தரவாதம் அளிக்குமா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று மத்திய அரசிடம் குழு தெரிவித்தது.
அதன் அடிப்படையில் மத்திய உயர்கல்வி செயலாளர் அமித் கரே, தமிழக அரசுக்கு கடந்த வாரம் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அதில், துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தையும், அதிகாரமளிக்கும் குழுவின் பரிந்துரையையும் சுட்டிக்காட்டி நிதிக் கான உத்தரவாதத்தை கேட்டு தமிழக அரசு பதில் கடிதம் எழுத கோரியிருந்தார்.
ஆனால் இதுவரை எந்த பதில் கடிதமும் அரசு தரப்பில் இருந்து அனுப்பப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து சட்டமசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அனுப்பி இருக்கும் கடிதத்துக்கு தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?, பதில் கடிதத்தை அரசு அனுப்புமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment