கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் சேர விரைவில் கவுன்சிலிங் அமைச்சர் பேட்டி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் சேர விரைவில் கவுன்சிலிங் அமைச்சர் பேட்டி

 


திருப்பூர், 

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்டப்பணி ஆய்வுக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி பயிற்சி மையத்தை உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் பண்ணை கிணறு ஊராட்சியில் தொடங்குவதற்கான அனுமதியை முதல்-அமைச்சர் வழங்கியிருக்கிறார்.இந்த ஆண்டு கால்நடை மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். அதுபோல் இந்த ஆண்டு 3 கால்நடை மருத்துவ கல்லூரிகளை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தலைவாசல், தேனி அருகே வீரபாண்டி, திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆகிய இடங்களில் தொடங்கயிருக்கிறது. 120 மாணவர்கள் படிக்கும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர 15 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள். கவுன்சிலிங் விரைவில் தொடங்க இருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தர வரிசை அடிப்படையில் இடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment